Saturday, August 27, 2011

இதையும் கொஞ்சம் படிங்க .......




மேலுள்ள ' புகைப்படத்தில் ' உள்ளவரை நியாபகம் இருக்கிறதா ??!
சில மாதங்களுக்கு  முன்பு
பாகிஸ்தானில் முல்தான் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை காப்பாற்ற கூறி அகில இந்திய ஊடகங்கள் கூக்குரலிட்ட நபர்தான்  இவர் !!!!

இவரை தூக்கிலிட வேண்டும் என்று அச்சமயத்தில் இந்தியாவில் இருந்து ஒருவராவது குரல் எழுப்பியிருந்தால் அது
' மனிதாபமானமற்ற கொடூர செயல் ' ,
' இந்திய இரத்தம் உடையவன் அல்ல '
என்று தீர்க்கமாக கருதப்பட்டிருக்கும் !!!

ஆனால் ,

அதையே இன்று அப்பாவி உயிர்கள் மூன்று பேரை காப்பாற்றக் கோரினால் ,
 ' நீதிமன்ற அவமதிப்பு ' , தேச துரோகம் , ராசீவ் கொலைக்கு எதிரான அநீதி !!!!


எஸ் எம் கிருஷ்ணா என்னும் இந்திய புறம்போக்கு துறை அமைச்சரின் மனிதாபிமானமற்ற 'சதி ' . . . !!!

' பாகிஸ்தான் அரசாங்கம் சரப்ஜித் சிங்கிற்கு மனிதாபிமான அடிப்படையில் மரண தண்டனையை நீக்க வேண்டுமென்று ' இந்தியா சார்பாக கோரிக்கை வைத்தவர் இந்த எஸ் எம் கிச்சினா !!!

இப்பொழுது புரிகிறதா இந்தியர்களுக்கிடையே அரசாங்கம் காணும் பாகுபாடு ????

இதில் ' UNITY in DIVERSITY ' என்னும் பீற்றல் வேறு !!!

ஹசாரேவை ஆதரிக்கும் மார்வாடியோ , வட இந்தியனோ .... இப்பிரச்சினையை பற்றி பேசுவதை ,  தெரிந்து கொள்வதை , விவாதிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள்   !!!!
காரணம் ,
ஒரே பதில் ' இராசீவ் குற்றவாளிகள் ' என்று தவறாக குத்தப்பட்ட முத்திரை !!!

அன்னா ஹசரே ஏற்படுத்திய மாய போராட்டத்தில் ஒவ்வொரு இளைஞனும் தன்னை சே குவேராவாக , பகத் சிங் காக , நேதாஜியாக கற்பனை போராளியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் !!!!

அசாமில் ஐலோம் ஷர்மிளா புறக்கணிக்கப்பட்டது போல ,
தென்னிந்தியாவில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் !!!

சிந்திப்போம் !! செயல்படுவோம் !!!



ஆதாரங்கள் :


( http://economictimes.indiatimes.com/news/politics/nation/india-asks-pakistan-to-release-sarabjit-on-humanitarian-grounds/articleshow/9564706.cms )

SARABJIT SING , CASE HISTORY :

( http://en.wikipedia.org/wiki/Sarabjit_Singh )



GOPAL DAS CASE :
( http://asiancorrespondent.com/51259/pakistan-cancels-prison-sentence-of-indian-man/ )

Sunday, August 14, 2011

செஞ்சோலை படுகொலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு







இலங்கையில் பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கொடூர விமான தாக்குதலில் கொல்லப்பட்ட இளஞ்சிறார்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் !!!!!!


இப்படுகொலையினைப் பற்றி NESHOR எனப்படும் வடக்கிழக்கு பிராந்தியத்துக்கான மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள ஆதார அறிக்கைகள் , காணொளிகள் !!!


இதைக் கண்டபின் அச்சம்பவத்தை கண் முன் நிறுத்தி கூறுங்கள் ,
ஏன் தமிழீழம் கேட்க கூடாதென்று !!!!!!!!




ஆங்கிலத்தில் :  MASSACRE of  ROSE BUDS









aNESHOR அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகள் :





BKM Petition_Final.pdf                                                                                                                                                                              
Sensolai.pdf
Type : pdf








14.08.2006 அன்று .........
முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில், செஞ்சோலை காப்பகத்தில் கூடியிருந்த எம் இன சிறார்கள் மீது இலங்கை வான்படைகளால் நடத்தப்பட்ட இக்கொடூரத்தாக்குதலில் , ஏறத்தாழ 61 பேர் பலியாகினர் .
134 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


சிறீலங்கா வான்படையை சேர்ந்த 4  ' கிபிர் ' இரக விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
உலக அமைதி மற்றும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், விமானங்கள் அவ்விடத்தை குறிவைத்தே தாக்கியதாகவும் , அப்பகுதியில் கிட்டத்தட்ட 10 குண்டுகள் விழுந்த பள்ளங்களையும் , சில வெடிக்காத குண்டுகளையும் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளனர் . மேலும், குண்டு விழுந்த இடங்களில் புலிகளின் இராணுவ நடமாட்டமோ அல்லது ஆயுத கட்டமைப்புகளோ இல்லையென்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் இறந்த மற்றும் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில் இருந்து இரண்டு நாள் முதலுதவி பயிற்சிக்காக வந்திருந்தனர் .

அனைவரும் 16 - 18 வயது வரை நிரம்பிய சிறார்களாவர் .
இறந்தவர்களில் 51 பேர் மாணவர்கள் , நான்கு பேர் பணியாளர்களாவர்.
இந்த இடமானது சுனாமி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு , பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கான காப்பகமாகும்.
இதை , இராணுவ தரப்பு ' புலிகளின் சிறார் பிரிவு இராணுவத்தின் பயிற்சி மையம் ' என்று குற்றம் சாட்டி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது !!!


இதைப்பற்றிய ஒரு முழுமையான பதிவு - ஆதாரங்களுடன் .  . . .

இங்கே சொடுக்குக :

செஞ்சோலை படுகொலையின் - நான்காமாண்டு நினைவு நாள்



Friday, June 3, 2011

ஐயகோ !!!! சீமானா இப்படி ?!?! : உண்மை விளம்புதல்


அதிகாலை நேரம் ,
வழக்கம் போல் என்னை எழுப்பும் என் நாய்க்குட்டியை விட ,
அதி விரைவாய் எழுப்பியது கைப் பேசி !!!
தொடர்பில் வந்த சில தோழமைகள் ' சீமான் அண்ணன் மீது அவதூறு குற்றச்சாட்டு.. உடன் முகநூல் பக்கம் வாங்க ' என்று கதைத்தார்கள் .
சிலரோ ' மாட்னான்யா உங்க சினிமாக்கார போராளி ' என்று எக்களித்தார்கள் !
ஒண்டும் விளங்காமல்
இணையத்திற்குள் என்னை இணைத்துக் கொண்ட போதுதான் தெரிந்துக் கொண்டேன்....
அந்த ' சூப்பர் டூப்பர் ' காமெடி செய்தியை !!!

செய்தி தீப்போல் இணையமெங்கும் பரவி ( செய்யப்பட்டதால் ! ) விட்டதால் ,
உடனே நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள் சிலரை தொடர்புக் கொள்ள முயற்சித்தேன் .
தொலைபேசியில் கிடைக்கவில்லை !!!
எனவே ,
' தன்னிறைவு ' விளக்கம் தேடி யாருதவியும் அன்றி நானே செயல்களில் இறங்க ( ப்பட்டேன் ) த் துவங்கினேன் !!!

அப்பப்பா.......

' சீமானா இப்படி ?!?!?! '

அங்கலாய்த்துக் கொண்டிருந்தது ஒரு பெரியார் முகமூடி போட்ட உருவம் !!!

' அண்ணன் மீது கற்பிக்கப் பட்ட பொய்க் குற்றச்சாட்டு !!! '
- இரத்தம் சூடேறிய என்னை விட இளசு ஒன்று !!!
.
யார் யாரோ ' சீமான் ' நல்லவர் என ஆதாரம் மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தார்கள் !!!
சிலர் எதிர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் !
தவறான ' நிலைச்செய்தி ' ( status ) கண்டு கடுப்பான இளசுகள் சில ,
சகட்டு மேனிக்கு போட்டவரை திட்டிக் கொண்டிருந்தன !!!
எவர் கருத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் , மெய்ப்பொருள் காண்பதறிவு எண்டு
தீவிரமாக செய்திகளை புரட்டிக் கொண்டிருந்தேன் !!!!!

யாரிந்த சீமான் ?

படம் எடுக்காமல் , தமிழீழம் , மக்கள் உரிமை என்று ஏனிந்த வீண் வேலை ?!?!
ச.ம.உ. கனவு கண்டுக் கொண்டிருந்த ' காங்கிரஸ் ' கரை வேட்டிகளை , அரசியல் நாயன்மார்களை டெபாசிட் கூட கிடைக்க விடாமல் , வேட்டி கிழிய கிழிய விரட்டி அடித்த சீமான் மீது சாட்டப்பட்ட
அருமையாக திட்டம் (!) தீட்டப்பட்ட குற்றச்சாட்டு !!!

இச்சதியினை செய்தவருக்கும் , இதை செயல்படுத்திய ' கூலி அல்லக்கைக்கும் ' இடையே இப்படித்தான் உரையாடல் நடைபெற்றிருக்கும் .....
.
டோங்கிரஸ் கேங் லீடர் : ' இவன் என்னிய நிரம்ப டிஸ்டர்ப் பண்றான்.... இவன தூக்கியகனும் ! '
அல்லக்கை : இப்போ சொல்லு தலீவா , அவன் அடிச்சு ஆட்டோல தூகியாறேன் !
டோ.கே.லீ. : ( மிரண்டு போய் ! ) அய்யயோ ( மனதுக்குள் ! ) : அதெல்லாம் வாணாம்.... அப்படிப் பண்ணா அண்ணனுக்குத் தான் அசிங்கம். அவன் பேர நாஸ்தி பண்ணி உண்டு இல்லைன்னு ஆக்கணும். ஐடியா கொடுடா !
அல்லக்கை : என்னாண்டா சொல்டல்ல.. உனக்கொசரம் இதுக்கூட பண்லன்னா நா எதுக்கு இருக்கணும்... இரு வந்திடறேன் !!!
( சிறிது நேரத்திற்கு பிறகு ! )
அல்லக்கை : தலீவா....... ரொம்ப நேரமா பார்(க்)ல ( டாஸ்மாக் ) உக்காந்து ரொம்ப நேரமா யோசிச்சத்துக்கு அப்புறம் செம ஐடியா இடாந்திருக்கேன்...... இந்தாம்மா இங்க வா !!!
டோ.கே.லீ : யார்ரா இது !!! எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு !!!!!!!
அல்லக்கை : இதான் தலீவா.. நம்ப பாஸ் படத்துல நடிச்சிதே ( ! ) அந்த பொம்பளத் தான் ... பேசாம இத வெச்சு அந்தாளு மேல கேஸ் கொடுக்க சொன்னா என்னா ?!?!
டே.கே.லீ : என்னன்னு ?
அல்லக்கை : அதான் .. அந்தாளு என்ன ஏமாத்திடாரு, அதப பண்ணாரு, இதப் பண்ணாருன்னு !!!
டே.கே.லீ : டேய்... இது வொர்க் அவுட் ஆவும்ங்கிற ???
அல்லக்கை : நல்லா அல்லாத்தையும் விசாரிச்சுத்தான் இட்டாந்திருக்கேன் !!! இந்தம்மா புகார் சொல்றதுல செம எக்ஸ்பர்ட்டாம் !!!!!! நீ வேணும்னா பாரு , அந்தாளு காலி !!!!!
டே.கே.லீ : சூப்பரப்பு ( ஆப்பு ! )
இப்படியாக நடைப்பெற்றிருக்கலாம் . . .

சீமான் கொடுத்த ' மரண ' அடியினை பொறுத்துக் கொள்ள முடியாத
ஏதோ ஒரு அவசரக்கார முந்திரிக்கொட்டை டோங்கிரஸ் போங்கு ஒண்டு பண்ண வேலைத் தான் எண்டு தெரிந்துக் கொண்டேன்.....
இருக்கிறதிலையே ' சீப் ( cheap ) அண்ட் டாப் பெர்மார்மிங்கா ( preforming) படத்தில விட ' ரியாலிட்டியா ' ஆக்ட் பண்ண தெரிந்த நடிகை என்பதால் பாஸ்ட் ஹிஸ்டரி ரெக்கார்ட்ஸ் ( Past History Records ) பற்றியெல்லாம் கவலைப் படாமல் , உடனே பேரம் பேசப்பட்டு அவசர அவசரமாக களமிறக்கப்பட்டிருக்கிறார்
என்றுத் தான் சொல்ல வேண்டும் !!!

சீமான் நல்லவரோ கெட்டவரோ ,
அவர் மீதான நல்ல , கெட்ட விடயங்களைப் பற்றி பேசுவதற்கு முன்
அதைப் பற்றி விவாதிக்கும் மனிதர்களின் பின்புலம் அல்லது நோக்கம் தெரிந்து வைத்திருத்தல் நன்று !!

நான்......
சீமான் எனக்கு தனிப்பட்ட மாமனோ , மச்சானோ அல்ல !!!
குடும்பத்தாருக்கு வேண்டியவரும் அல்ல !!!
உறுதியான அரசியல் பலம் உள்ளதென்பதால் ,
நண்பர்கள் ஊடாக இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்பியதில்லை !!!
அவரைப் பற்றி நட்புக்களிடம் பேசியதும் சரி , ' நாயன்மார்களை ' எதிர்த்து களமிறங்கியபோது ஆதரித்ததும் சரி ,
அவர் தீவிர தமிழீழ உணர்வாளர் என்பதற்காக மட்டுமேயன்றி , வேறு நோக்கங்கள் ஏதுமல்ல !!!
அவர் தவறு செய்யும் போது தட்டிக் கேட்டு பதிவிட்டால் உடனே கண்டன மின்னஞ்சல்கள் பறக்கின்றன ... விஷ வார்த்தைகளுடன் !!!
இதே இடத்தில் ' கோமான் ' என்றொருவர் இருந்திருந்தாலும் , இதே தான் செய்திருப்பேன் ...
இதைப் புரிந்துக்கொள்ளாமல் ,
சீமானைப் பற்றி தமக்கை ' ஜெனி ' அவர்கள் பேசியபோது , கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் !!!
இங்குப் பிரச்சினை,
ஒரு தமிழின உணர்வாளனின் மேல் பொய்க் குற்றச்சாட்டு.
அதில் புதைந்திருக்கும் உண்மையினை எடுத்து உலகிற்கு உணர்த்த வேண்டும் !!!
அவ்வளவே....
அதைவிட்டு ,
யார் எந்த பக்கம் ,
யார் என்ன குறைக கூறினர் என்று கவனித்துக் கொண்டிருந்தால்
நிஜத்திற்கு உதவாது !!!


' சீமான் என்பவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் , அவரது தனி வாழ்வைப் பற்றியது ! '
இதற்கும் அவரது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை ...
இதனால் , அவரும் தோய்வடையப்போவதில்லை.....
தவறு யார் மீதேன்று நிரூபிக்கப்பட்டாலும் , மீண்டு ( ம் ) களத்திற்கு வருவார்.
இதனால் தமிழீழ போராட்டத்திற்கே களங்கம் என்பவர்கள் ,
ஒருமுறை ' கதவைத் திறந்த ' நாயகரை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னமும் அக்காணொளி ' கிராபிக்ஸ் ' என்று அப்பாவியாக நடித்து ஊரெங்கும் பரப்பி வரும் இவர் , இரஞ்சித பிரச்சினை ஓயும் முன்னே ' தனது ' பட்டறையை நடத்தவில்லையா ?!?!?!

எனவே ,

இதை ஒரு தனி மனித பிரச்சினையாக மட்டுமே காண கேட்டுக் கொள்கிறேன் !!!
இதைவிட ,
சீமான் மீதான அவதூறை நாம் ' பேஸ்புக் ' போன்ற சமூக வலைதளங்களில் விவாதிப்பதோ , கருத்துப் போரோ ஏற்படுத்தி தீர்வு கான முயல்வதை விட ,
அவ்வாறான நபர்களுக்கும், விடயமறிந்து குழம்பிக் கிடக்கும் மக்களுக்கும் தெளிவாக உங்களது தரப்பு நியாயங்களை எடுத்துரையுங்கள் !
அவர் மீதான நியாயங்களை எடுத்துரைக்க முயற்சி செய்தல் நலம் பயக்கும் !!!
அதை விட்டு ,
அவரைப் பற்றி தவறாக கருத்துரையிடும் நபர்களோடு சண்டைக்கு போவது நேர வீணடித்தலே !!
நீங்கள் தெளிவுப் படுத்த வேண்டியது !!!
சீமான் இராமேஸ்வரம் கூட்டத்தில் பேச பணம் வாங்கியதாகவும் , அதை தம்பி ஜேம்ஸ் மூலம் அந்நடிகைக்கு கொடுத்தனுப்பியதாக ' தன்மானமென்றால் என்னவென்றே அறியாத ' அமைப்பை சேர்ந்த ஒரு ' போர்வாளளும் ' , ' அழுக்கு ' சட்டையும் ' தெரிவித்தது !!! அதை தெளிவுப்படுத்துங்கள் !!!
ஒரு பொம்பளை பொய் புகார் குடுத்தா, இவர் தானே விளக்கம் குடுக்கணும்.. இவர் வக்கீல் எங்க வந்தார் உள்ளே?? வெறும் புகார் குடுத்ததுக்கே வக்கீல் தான் பேசுவாரா?? யோக்கியர் இவர் பேசி மறுப்பு குடுக்க வேண்டியதுதானே ???

இதற்கு ______
TAMIL CNN எனப்படும் டுபாக்கூர் இணைய செய்தித் தளம் ,
பெரிய விக்கி லீக்ஸ் அளவுக்கு போட்டிருக்கும் தகவலைப் பாருங்கள்....
பல வருடமாய் சீமானைப் பற்றி புலனாய்வு செய்தது போலவே இருக்கும்


அதிலும் ,
ஆசிரியர் குறிப்பை பாருங்கள் !!!!
இது தான் இவர்களின் நடு நிலையும் , ஈழ ஆதரவும் ...
ஒரு முறை இவ்விணைய தள ஆசிரியரிடம் பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது '
என்ன தான் நாம் ஈழ ஆதரவாளராக இருந்தாலும், நடு நிலையாய்த்தானே போட வேண்டும் ' என்றார்.
இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது இவர்களது ' நடுநிலை '.
ஏதோவொரு காழ்ப்புணர்ச்சிக்காக இவ்வளவு தரம் தாழ்ந்து என்னமோ அழகில் மயங்கி அடுத்தவர் பெண்டாட்டியை கவர்ந்து சென்று வந்து விட்டது போலிருக்கும் இவரது ' புலனாய்வு அறிக்கை ' போன்ற ' ஆசிரியர் குறிப்பு ! '.
குளுகுளு அறையில் ஐரோப்பிய நாட்டிலமர்ந்து தளமமைத்து என்ன வேண்டுமாயினும் கிறுக்கி விட முடியும்....

ஆனால்,

இவரைப் போலவே புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் ,
அலுவல்களை கூட விட்டுவிட்டு தாய்நாட்டிற்காக களத்தில் இறங்கி கொடி பிடித்து வருகின்றனர்.
ஒரு தமிழீழ ஆதரவாளனை அசிங்கப்படுத்தி ஊடக சுதந்திரம் என்னும் பெயரில் நசுக்கும் முயற்சி கேவலமானது மட்டுமின்றி , தவிர்க்கப் படவேண்டியது !!!


மொகலாய வம்சத்தில் வந்த ஷாஜஹான் , இறந்த தன் மனைவியின் நினைவாக யமுனை நதியோரம் ' தாஜ்மகாலை ' கட்டினார் என்று சொல்லுகிறீர்கள்.
உண்மையில் ,
வரலாற்றினை நன்கு படித்தவர்கள் அறிந்திருக்க கூடும் ....
' ... மும்தாஜின் அழகில் மயங்கிய ஷாஜஹான் , அவரின் கணவரை வெளியூருக்கு அரசு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டார் . ஆனால் , சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பாமலேயே இறந்துப் போனார் . அது விபத்தென்றும் , உடல் நலம் குன்றி இறந்துப் போனார் என்றும் சொல்லப்பட்டாலும் ,
ஷாஜஹானே மும்தாஜை அடைய நடத்திய சதி என்று கூறுவோரும் உண்டு ..... '
~ காதலின் சின்னம் என்று மக்களால் போற்றப்படும் ' தாஜ்மகாலுக்கு ' பின்னே இவ்வளவு கேவலமான கதை இருக்கிறது ... அதற்கு நிகராக கதைக் கட்டி விட்டிருக்கிறார் அந்த ஆசிரியர்.
என்னமோ அந்த ஈழப் பெண்ணின் அழகில் மயங்கி , இலங்கை ராணுவப் பிரிவுக்கு பெரும் பணம் கொடுத்து அவரை மீட்டு திருமணம் செய்யப் போவதாக எழுதி கிழித்திருக்கிறது இத்தளம் !!!
அப்படியானால் ,
பெரும் பணம் கொடுத்து ' தமிழீழம் ' வாங்கியிருக்கலாமே.....?
குறைந்தது ' இலங்கைக்கு ' நாலைந்து ' ஜாலி' ட்ரிப் அடித்திருக்கலாமே ?!!!!!!!!
விழிகள் சிவக்க , தொண்டைக் கிழிய , நரம்புகள் முறுக்கேற ,
ஒவ்வொரு மேடையிலும் கர்ஜிக்கும் சீமான் மீது எப்பேற்பட்ட இழிவான ஊடக தாக்குதல் ?!

மேலும்,
' மேடம் ' விஷய.. மன்னிக்க.... விஜயலட்சுமியின் ' கேஸ் ஹிஸ்டரியை ' ( Case Histoy ) யை பார்ப்போம்.....


அம்மணியைப் பற்றி ,

சில முதுநிலை பத்திரிக்கையாளர்களின் கருத்துக்கள் கீழே :

அன்பர் . உண்மைத் தமிழன் :

/ / முதல் காரணம் செல்வி.விஜயலட்சுமியின் குணநலன்கள் அவர் சின்னத்திரைக்குள் கால் வைத்த தினத்தில் இருந்து என் காதுகளுக்கு எட்டியபடியே இருந்ததினால்தான்..! அவரைப் பற்றிய பல திடுக்கிடும் செய்திகள் பலவிதமான நண்பர்களிடமிருந்து ஒரே மாதிரியாக வந்து சேர்ந்து கொண்டேயிருந்தன.
அது ஒன்றே ஒன்றுதான்.. அவர் தகுதிக்குரியவர் என்று யாரை நினைக்கிறாரோ அவரிடமெல்லாம், “ஐ லவ் யூ..” சொல்வார்..! சிலரை இப்படியே கிறங்கடித்திருக்கிறார். பலர் அது உண்மையோ என்று நம்பி விஜயலட்சுமியுடன் சின்சியராகப் பழகத் துவங்க, சில நாட்களிலேயே வேறொருவருக்கு “ஐ லவ் யூ..” சொல்லிவிட்டு தாவி விடுவார் என்றார்கள்..! //

// சீரியல்களில் நடிக்கும்போது, “நான் உங்களைக் காதலிக்கிறேன்..” என்று சில புரொடெக்ஷன் மேனேஜர்கள், கேமிராமேன்கள், இயக்குநர்களிடத்தில் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இரண்டாவது யூனிட் இயக்குநரைக்கூட அவர் விட்டுவைத்ததில்லை. //

// “ஏன் லேட்டா வர்றீங்க..?” என்று கேட்டால்கூட 'கையைப் பிடித்து இழுத்தார்' என்ற ரேஞ்ச்சுக்கு ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார் விஜயலட்சுமி. இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைச் சமாளித்தார்கள் இயக்குநர்கள்..!

அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோதுதான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராடன் டிவி நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டு பஞ்சாயத்தாக்கப்பட்டது. அப்போதுதான் விஜயலட்சுமி சொன்ன “ஐ லவ் யூ” கதைகள் அனைத்தும் அம்பலமாகின..!
'தங்கவேட்டை' நிகழ்ச்சியின் இயக்குநர் ரமேஷ் மீது தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி பொய்யாக, போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு போன பின்புதான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் ரமேஷ்.. சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்..! //

மேலும் ,

என்னை விட இவர் வைக்கும் கேள்விகளை சிந்தித்துப் பாருங்கள் ....


அன்புக்குரிய உறவுகளே . . .
இது யார் சீமானை ஆதரிக்கிறார்கள் , உண்மையைக் கூறுகிறோம் என்னும் பெயரில் சேற்றை வாரி இறைக்கிறார்கள் என்பதை எதிர்க்கவும் , வார்த்தை யுத்தத்தில் ஈடுபடவும் சரியான தருணமல்ல .
சிலர் இன்னும் கீழ்த்தரமாய் ' பெரியாரையும் , சீமானையும் ' சமன்படுத்தி பேசுகிறார்கள் . திராவிடம், பார்ப்பனியம் என்று கருத்து மோதல்களை ஏற்படுத்துகிறார்கள் .
இவை அனைத்தும் , தமிழ்ர்களின் போராட்டத்தை முனை மழுக்கும் உளவாளிகளின் தந்திரமே என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன் !

எனவே ,

இவற்றை கடந்து நம் தோழருக்கு தோள் கொடுக்க இணைந்துப் பயணிப்போம்.
இது ,
' ஈழ உணர்வாளனுக்கு ' தேவையற்ற தொந்தரவு கொடுத்தால் ,
என்ன நடக்குமென்பதை உலகிற்கு குறிப்பாக டோங்கிரஸ் அன்பர்களுக்கு காட்டும் இரண்டாம் வாய்ப்பு !!!!

தமிழராய்
ஒன்றித்து இருப்போம்,
தமிழீழம் வென்றெடுப்போம் !!!!

~ மெய்ப்பொருள் காண்பதறிவு ! ~
* இளம்புலி *

Monday, May 9, 2011

இலங்கை படுகொலைகளை விசாரிக்ககோரி கையெழுத்து இயக்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.


ஐ.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டியதன் நியாயத்தையும், சிறிலங்காவை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான நியாயத்தையும் தெளிவுபடுத்தும் நினைவுப்பத்திரம் ஒன்றில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு வழங்ககப்படும்.

எனவே ,

தோழர்கள் அனைவரும் உடன் கீழ் உள்ள சுட்டியை அழுத்தி ,  படிவத்தை தரவிறக்கி பிரதி எடுத்துக் கொள்ளவும் .
இறுதிப் பக்கத்தில் உங்களது பெயர் , தொடர்பு விபரம் , கையெழுத்து ஆகியவற்றை பதிவு செய்யவும்.



அல்லது


DOWNLOAD SIGN PETITION  '

தரவிறக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேரிடமாவது கையெழுத்துக்களை பெற்றால்தான் விரைந்து நமது இலக்கினை அடைய முடியும் .
கூடுதல் கையெழுத்துக்கள் பெறும்போது இறுதிப் பக்கத்தினை மட்டும் கூடுதலாக பிரதி எடுத்து இணைத்துக் கொள்ளவும்.

கையெழுத்து பதிவுகளை எமக்கு 13.05.2011 க்குள் கிடைக்கும்படி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் .

தொடர்பு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் .

ஏற்கனவே பல முறை கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் , தமிழ் மக்களின்   உத்தியோகபூர்வமான அரசாங்கத்தின் மூலம் நடத்தப்படுவதால் தயை செய்து மிக விரைந்து பொறுப்புணர்வுடன் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் !!!


மேலும் விபரங்கள் தேவைப்படின் ,
பின்னூட்டம் இடவும் !

நன்றிகளுடன் ,

~ ' தமிழ் சிறுவன் ' ~



சிறிலங்காவின் இனப்படுகொலைகள் பற்றிய விசாரணையை கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம்

இந்த முயற்சியில் ஒவ்வொரு தமிழரையும் செயற்றிறனுடன் பங்குபற்றுமாறு நாடுகடந்த தமிழீழ அரசு கேட்டுக்கொள்கிறது. தமிழராக பிறந்த ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டவர்களுக்கு நாம் செலுத்தும் ஒரு அஞ்சலியாக இது அமைகிறது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்கள் உலகெங்கும் உள்ள தமது தொகுதி மக்களிடம் மேற்படி கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளனர்.


சிறிலங்காத்தீவில் நிலவும் பயம் தரும் சூழ்நிலை காரணமாக தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் தமது விருப்பங்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலையில் தமிழ்மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்தும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விழுந்துள்ளது.


தமிழர் பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தினரால் நிரம்பியுள்ள நிலையில் படுகொலைகள், காணாமல் போதல், கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் போன்ற பாரிய மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதற்கும், சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்குமான தேவை குறித்த தமிழ் மக்களின் குரல் தெளிவாகவும் உரத்தும் ஐ.நா. செயலாளர் நாயகம் அவர்களுக்கு கேட்பதை உறுதிப்படுத்தும் கடமை புலம் பெயர்ந்த தமிழர்களினால் தெரிவுசெய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கு உள்ளது.

ஐ.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டியதன் நியாயத்தையும், சிறிலங்காவை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான நியாயத்தையும் தெளிவுபடுத்தும் நினனவுப்பத்திரம் ஒன்றில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு வழங்கப்படும்.

போரின் இறுதிநாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டும், மக்கள் தொகையாக கொல்லப்பட்டும், பாலியல் வல்லுறவுகள் செய்யப்பட்டும், கட்டாயமாக காணாமல் போக செய்யப்பட்டும், பரந்தளவில் எறிகணைத்தாக்குதல்கள் செய்யப்பட்டும், உணவு மறுக்கப்பட்டும், மருந்துகள் மறுக்கப்பட்டும், செய்தியாளர்கள் பயமுறுத்தப்பட்டும் உள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர்களை கொன்றததற்காகவும், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதற்காகவும் சிறிலங்காவின் அரசதலைவர்களையும் இராணுவத்தினரையும் நீதியின் முன்னிறுத்துவதற்கான நாடுகடந்த தமிழீழ அரசின் முயற்சிகளின் தொடர்ச்சியே இந்த கையெழுத்து சேகரிப்பாகும். ஐ.நா. அறிக்கைக்கு எதிரான சிறிலங்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசு நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழு பல்வேறு அரசுகளையும் சந்தித்து சிறிலங்காவின் ஐ.நா.வுக்கு எதிரான பிரச்சாரத்தை பற்றி விளக்கவுள்ளது. ஐ.நா. நிபுணர்கள் குழுவின் விசாரணையின் போது சிறிலங்கா பாரிய அளவில் தமிழ் பொதுமக்களை படுகொலை செய்தது பற்றி விளக்கமான அறிக்கையொன்றை நாடுகடந்த தமிழீழ அரசு சமர்ப்பித்து இருந்தது.


https://sites.google.com/site/ltezhilan/download/BKMPetition_Final.pdf?attredirects=0&d=1

Wednesday, April 20, 2011

வன்னி மக்களை சிறீலங்கா அரசு நடத்தும் விதம்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு



வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்... 30 வருட காலப் போர் முடிந்து விட்டது...

இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக இலங்கையின் அரச கட்டமைப்புக்களால் அறிவிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் முடிந்து விட்டன.

ஆனால் இங்கே கையில் விபரப் பலகையுடன் நிறுத்தப்பட்ட வயதானவர்கள் வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய தமிழ் மக்கள்...